முதலமைச்சர் பேத்தி நான்!! கட்டாயப்படுத்தி அஜித்துடன்.. பிரபல நடிகை உடைத்த ரகசியம்
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் காதல் மன்னன்.
இப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக், பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் என பலர் நடித்திருப்பர். அஜித்துக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை மானு நடித்திருப்பார்.
ஒரே படத்தில் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன மானு அப்படத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அதன் பின் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.
உடைத்த ரகசியம்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் காதல் மன்னன் படம் குறித்து சில அதிர்ச்சி சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதில், "என் குடும்பத்தில் சினிமா பக்கம் யாரும் வந்ததில்லை.
என் தாத்தா கோபிநாத் பர்டோலால், அசாம் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்திருக்கிறார். நான் என் பள்ளி படிப்பிற்காக தான் மெட்ராஸ் வந்தேன்.
நடிகர் விவேக், இயக்குனர் சரண் தான் நான் ஸ்கூல் படிக்கும்போதே என்னை கட்டாயப்படுத்தி காதல் மன்னன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தனர்" என்று தெரிவித்துள்ளார்.