நிறம் குறித்த கேள்வி.. மேடையில் உண்மையை சொன்ன நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Aishwarya Rajesh Tamil Cinema Actress
By Bhavya Mar 17, 2025 09:30 AM GMT
Report

ஐஸ்வர்யா ராஜேஷ் 

மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

நீதானா அவன் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

நிறம் குறித்த கேள்வி.. மேடையில் உண்மையை சொன்ன நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் | Actress About Her Colour

பின் காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ், வட சென்னை என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார். தற்போது தெலுங்கு சினிமா பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

அதன்படி ஐஸ்வர்யா ராஜேஷ், சங்கராந்திக்கு வஸ்துன்னம் என்ற படத்தில் வெங்கடேசுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அதிரடி பதில் 

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது கலர் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நிறம் குறித்த கேள்வி.. மேடையில் உண்மையை சொன்ன நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் | Actress About Her Colour

அங்கு செய்தியாளர் ஒருவர் நீங்கள் இப்போது இருக்கும் கலர் ஒரிஜினலா இல்லை படத்தில் இருக்கும் கலர் ஒரிஜினலா? என்று கேள்வி கேட்க, அதற்கு "நான் வெள்ளை நிறத்தில் இல்லை. நம்ம ஊரு கலர் மாநிறம் தான், அதுதான் அழகு" என்று தெரிவித்துள்ளார்.