அதை சாப்பிடச்சொல்லி என் மாமியார் வற்புறுத்தினார்!! நடிகை கத்ரினா ஓபன் டாக்..
கத்ரினா
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கத்ரினா கைஃப் கடந்த 2021ல் நடிகர் விக்கி கெளஷலை திருமணம் செய்தார். திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில் கத்ரினா - விக்கி ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
சமீபத்தில் நடிகை கத்ரினா கைஃப் தி கபில் சர்மா ஷோவில் கலந்து கொண்டு தன்னுடைய திருமணத்தின் ஆரம்ப நாட்களை பற்றி பகிர்ந்துள்ளார்.

அதில், தன்னுடைய மாமியார்(மம்மி ஜி) என்னை பராத்தா சாப்பிட வற்புறுத்தினார். நான் டயட்டில் இருந்ததால் ஒரு வாய் மட்டுமே சாப்பிட்டேன். இப்போது எனக்காக சர்க்கரைவள்ளிக்கிழங்கு செய்கிறார் என்று கத்ரீனா கூறியிருக்கிறார்.
மேலும் விக்கி கெளஷல், எங்கள் திருமணம் பராத்தா வெட்ஸ் பான்கேக் போன்றது, அவளுக்கு பான்கேக் பிடிக்கும், எனக்கு பராத்தா பிடிக்கும், கத்ரினாவும் பராத்தா சாப்பிடுவார், அம்மா கையால் செய்த பராத்தாக்கலை அவள் விரும்புவாள் என வேடிக்கையோடு பகிர்ந்துள்ளார்.