அப்படி பண்ணலைன்னா விவாகரத்தா? நடிகை பாவனா ஆவேசம்
பாவனா
நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தவர். விறுவிறுப்பாக எல்லா மொழிகளிலும் தரமான படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய சோகமான விஷயம் நடந்தது, அது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு நடிகை பாவனா படங்களில் நடிக்கவில்லை, மாறாக தனது காதலரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
விவாகரத்தா?
இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனக்கு வரும் மோசமான கமெண்ட் குறித்து பேசியுள்ளார். அதாவது, சோசியல் மீடியாவில் அதிகமாக புகைப்படங்களை நான் வெளியிடுவது இல்லை.
இதனால் எனக்கும் எனது கணவருக்கும் இடையே பிரச்சனை உள்ளது. அதனால் நாங்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தகவல் அவ்வப்போது இணையத்தில் பரவி வருகிறது.
இணையத்தில் புகைப்படம் வெளியிட வில்லை என்றால் விவாகரத்து பெற போகிறோம் என்று அர்த்தமா? ஒரு போட்டோ போட்டால் கூட கணவர் காணோமே என விவாகரத்து சர்ச்சையை கிளப்பிடுவார்கள்" என்று கூறியுள்ளார்.