படப்பிடிப்பில் ஹீரோ அதை பிடித்து, வலிக்கிறது சொன்னேன் ஆனால்.. பிரபல நடிகை பரபரப்பு!
சினிமாவில் நடிகைகள் பல கஷ்டங்களை கடந்து தான் தனக்கான இடத்தை பிடிக்கின்றனர். அந்த வகையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள ஒரு நடிகை கன்னட படத்தின் படப்பிடிப்பின் போது ஹீரோ தன்னை காயப்படுத்தியதாக சொன்னார்.
இவரா!
அவர் வேறு யாருமில்லை, நடிகை சஞ்சனா கல்ராணி தான். தற்போது அவரது வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சனைகளை கடந்து வந்தது குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், " ‘ஒரு கன்னட படத்தில் நடிக்கும்போது எனக்கு சங்கடமாக இருந்தது. அந்த படத்தில் ஹீரோ என்னை காயப்படுத்தினார். ஒரு காட்சியின் படப்பிடிப்பின்போது ஹீரோ என் கைகளை இறுக்கமா பிடித்தார்.
ஆனால், அந்தக் காட்சியில் ஹீரோ என் கைகளைப் பிடித்து முன்னாடி அழைத்து செல்ல வேண்டும். ஆனால், அவர் கோபமாக இறுக்கமாக என் கையை பிடித்து கசக்கினார்.
நான் வலிக்கிறது என்று சொன்னேன். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தினேன்.
நான் அங்கு அடி வாங்க வரவில்லை, இது ஆக்சன் சீன் இல்லை, நான் வில்லியும் இல்லை என்று கூறினேன். இப்படி சிலர் இருப்பார்கள், அவர்களை புறக்கணித்து விட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.