யாருக்கும் தெரியாமல் நடிகையை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வைத்த தயாரிப்பாளர்!! சுயரூபத்தை காட்டி விரட்டிய டி. ஆர்
தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்று பன்முகத்திறமையால் கொடிக்கட்டி பறந்தவர் டி ராஜேந்தர். அவர் எடுக்கும் படங்கள் எதார்த்தமாகவும் அழுகை வரவேற்கக்கூடிய படங்களை கொடுத்து வந்தார்.
அப்படி அவர் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான படம் ரயில் பயணங்கள். நடிகர் ஸ்ரீநாத், நடிகை ஜோதி இப்படத்தில் நடித்திருந்தனர். ஆனால் இப்படத்தில் கதாநாயகியாக வேறொரு நடிகை தான் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
80, 90களில் டாப் இடத்தில் இல்லாத அந்த நடிகை டி ராஜேந்தரை சந்திக்க அலுவலகம் சென்றிருக்கிறார். அங்கு தயாரிப்பாளர் மட்டுமே இருந்ததால் உள்ளே வாமா என்று அழைத்து பேசியிருக்கிறார்.
அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் ஆனால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டிருக்கிறார். அந்த நடிகையும் வாய்ப்பிற்காக தயாரிப்பாளர் கூறியதை போன்று அட்ஜெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறார்.
பின் இந்த விசயம் தெரிந்த டி ராஜேந்தர், அந்த நடிகையும் வேண்டாம் தயாரிப்பாளரும் வேண்டாம் என்று கூறி ஸ்ரீநாத் மற்றும் ஜோதியை நடிக்க வைத்து சூப்பர் ஹிட் பெற்றிருக்கிறார். இதுவரை டி ராஜேந்தர் எந்த வதந்திகளிலும் தவறான பாதையிலும் செல்லாமல் இருக்கும் இயக்குனராக திகழ்ந்து வந்துள்ளார்.
