சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க கூடாது என்று சொன்னார்கள்.. தனுஷ் பட நடிகை பேட்டி
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகரில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த இவர், மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.
இதன் பின்னர் இவர் பல வெற்றி படங்களை கொடுத்து கோலிவுட்டின் டாப் நடிகர்களின் வரிசையில் இவரும் இடம் பிடித்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனங்களை கொடுத்தனர். இதனால் பாக்ஸ் ஆபிசில் படும் தோல்வி அடைந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் அயலான், மாவீரன் போன்ற படங்களை லைன்அப் வைத்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் இவர் தனுஷ், விஜய்சேதுபதி, அருண் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், "நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்க வேண்டாம் என்று பலரும் கூறினார்கள். இது போன்று சினிமாவில் நடித்தால் அக்கா, தங்கச்சி ரோல்கள் தான் கிடைக்கும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்றெல்லாம் சொன்னார்கள் . இருப்பினும் அந்த கதை அம்சம் எனக்கு பிடித்திருந்ததால் நான் நடித்தேன்" என்று கூறியுள்ளார்.