பிரம்மாண்டமாக நடந்த சரிகமப சீசன் 5 இறுதிச்சுற்று.. டைட்டில் வின்னர், 2ம் இடம், 3ம் இடம் யார்?
TV Program
Saregamapa Seniors Season 5
By Bhavya
சரிகமப
ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரிகமப. முதல் சீசனிற்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து ஒளிபரப்பாகி இப்போது சீனியர்களுக்கான 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இந்த சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
டைட்டில் வின்னர்!
மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் சுசாந்திகா டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
அவருக்கு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது. 2ம் இடத்தை பிடித்து ரன்னர் அப் - சின்னு செந்தமிழன் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கம் ஒன்றை வென்றுள்ளார். கோல்டன் வாய்ஸ் - பவித்ரா (5 லட்சம் மதிப்புள்ள தங்கம் ஒன்றை பெற்றுள்ளார்.
