வெட்கமே இல்லாமல் அதை நான் செய்வேன்.. நடிகை அமலா பால் ஓபன் டாக்
தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் தெய்வ திருமகள், தலைவா, மைனா, வேலையில்லா பட்டதாரி என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், இந்த திருமண வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே விவாகரத்தில் முடிவுக்கு வந்தது. அதன்பின், கடந்த 2023ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை அமலா பால் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில், கேரளாவில் ரோட்டு கடைகளை தட்டுக்கடை என்றுதான் சொல்வார்கள். அங்கே நல்ல மஞ்சளாக இருந்தால் நல்ல பழம்பூரி. அந்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, முகத்தில் அணிந்திருக்கும் மாஸ்க்கை கழற்றிவிட்டு பழம்பூரியை சாப்பிடுவேன். அதே போல் பானிபூரியும் சாப்பிடுவேன்.
வெட்கமே இல்லாமல் மாஸ்க்கை கழற்றிவிடுவேன். அங்கே வருபவர் அமலா பால் என்று ஆச்சரியமாக பார்ப்பார்கள். ஆனால், நானோ அதெல்லாம் இல்லை என்று Fun செய்வேன். கேரளாவில் ரோடு பயணம் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்" என அவர் கூறியுள்ளார்.