இயக்குநர் ராஜமௌலியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதோ விவரம்
மகதீரா, நான் ஈ, பாகுபலி 1&2 மற்றும் RRR என தொடர்ந்து பல ப்ளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவர் 2001ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்டுடென்ட் நம்பர் 1 படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர் எனும் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இவர் இயக்கத்தில் தற்போது மகேஷ் பாபு நடித்து வரும் SSMB29 படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு, அவர்களுடைய சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை குறித்து அவ்வப்போது தகவல் வெளிவரும். அந்த வகையில், இயக்குநர் ராஜமௌலியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் ராஜமௌலியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி என கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.