என்னையும் பல முறை அட்ஜெஸ்ட் பண்ண கேட்டாங்க!! ஓப்பனாக பேசிய பாலா பட நடிகை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஆனந்தி. அந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் போட்டியாளராக கலந்து கொண்ட பாய்ஸ் VS கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வைரலானார். அதன்பின் கார்த்திகை பெண்கள், கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், கனா காணும் காலங்கள் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை, மீகாமன், ராஜா மந்திரி வாலு போன்ற படங்களில் நடித்து தொகுப்பாளினியாக பங்கேற்றும் பிரபலமானார். கடந்த 2017ல் அஜய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். பின் 2017 டிசம்பர் 4ல் அழகான ஆர்யாவீர் என்ற ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்த நடிகை ஆனந்தி அஜய், இரண்டாம் முறை கர்ப்பமாகி கடந்த ஆண்டு பெண் குழந்தையை பெற்றார். அதன்பின் உடல் எடையை தீவிரமாக குறைத்து பழைய நிலைக்கு மாறினார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றிய சில தகவலை பகிர்ந்துள்ளார். சினிமாத்துறையில் மட்டும் இல்லை, உலகத்தில் எல்லா இடங்களிலும் இருக்கு, எனக்கு இதுபோன்ற கால்கள் வந்திருக்கு. நான் புதிதாக வந்த சமயத்தில் நிறைய வந்திருக்கிறது. நாம் அதற்கு எப்படி ரெஸ்பான்ஸ் பண்ணுவதில் தான் இருக்கிறது.
பெண்கள் அதற்கு நோ என்று சொல்லிவிடனும். அவர்கள் அப்படி தான் கூப்பிடுவார்கள், நாம் தான் அதை சரியாக சமாளிக்க வேண்டும். அந்த சமயத்தில் ஏன் இப்படி கேட்கிறார்கள் என்று யோசித்திருக்கிறேன். அதற்கு நோ என்று சொல்லிவிட வேண்டும் என்று ஓபனாக பேசியிருக்கிறார் நடிகை ஆனந்தி அஜய்.