அஜித் ரீல் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!! வைரலாகும் நடிகை அனிகாவின் புகைப்படம்..
மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் குடி நட்சத்திரமாக அறிமுகமாகினார் அனிகா சுரேந்திரன். இப்படத்தினை தொடர்ந்து பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
பின் மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன் தாராவிற்கு மகளாக நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்று வந்தார். 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்கள் தன் பக்கம் ஈர்த்து வந்த அனிகா, தற்போது 18 வயதானது கதாநாயகியாக நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் உச்சக்கட்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வந்த அனிகாவின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. நந்தினி என்ற பெயரில் அனிகாவின் புகைப்படம் பதிந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
16.07.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என்று போடப்பட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார். ஆனால், அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அனிகா நடித்து வரும் ஒரு படத்திற்காக எடுக்கப்பட்டது. அப்படத்தில் நந்தினி என்ற ரோலில் அனிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
