பசங்க ஹேப்பி மேடம்.. ட்ரெண்டி உடையில் கலக்கும் நடிகை அஞ்சலி
அஞ்சலி
கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றார்.
கடைசியாக இவர் நடிப்பில் 'பகிஷ்கரனா' என்ற வெப் சீரிஸ் வெளியானது. அதை தொடர்ந்து, 'கேம் சேஞ்சர்' படம் வெளியானது. சமீபத்தில் அஞ்சலி நடிப்பில் வெளியான மதகஜராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த படம் கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2013ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சில பிரச்சனைகளால் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இப்படம் 2025, ஜனவரி பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது.
தற்போது ட்ரெண்டி உடையில் அஞ்சலி எடுத்திருக்கும் போட்டோஷூட் இதோ,