படவாய்ப்பு போனதால் மதம்மாறிய தமிழ் நடிகை!! இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?
மாதவி என்கிற மாத்து
சென்னையில் பிறந்து கன்னட சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரஜினியின் பைரவி, கமலின் நீயா உள்ளிட்ட படங்களில் நடித்து அறிமுகமாகியவர் தான் மாதவி என்கிற மாத்து. அதன்பின் தமிழ் சினிமாவில் கோவில் மணி ஓசை, ஜாடிக்கேற்ற மூடி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஆரம்பத்தில் தமிழில் வாய்ப்பு கிடைத்தாலும் மாத்துவுக்கு வாழ்க்கை அளித்தது மலையாள சினிமா தானாம். பூரம் என்ற மலையாள படத்தி கதாநாயகியாக அறிமுகமாகினார் மாத்து. அப்படத்தின் கேரக்டர் பெயர் தான் மாத்து. அதன்பின் அவரின் பெயர் மாதவியாக மாறியது. அவருக்கு 1980 - 90களில் மிகப்பெரிய இடத்தினை கொடுத்தது அமரம் என்ற படம் தான். 1991ல் அமரம் படத்தில் மம்மூட்டியின் அப்பாவி மகள் ராதா என்ற ரோலில் நடித்து பிரபலமானார்.
பின் பெரும்தச்சன் என்ற படத்தில் கமிட்டாகியிருந்த மாத்து, திடீரென அப்படத்தில் இர்ந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக நடிகை மோனிஷா கதாநாயகியாக்கப்பட்டார். தனக்கு கிடைத்த வாய்ப்பு பறிப்போன வருத்தத்தில் ஒருக்கட்டத்தில் முடங்கிப்போனார்.

மாத்து அளித்த பேட்டி
இதனையடுத்து மாத்து அளித்த பேட்டியொன்றில், குட்டேட்டன் படத்திற்கு பின் பெரும்தச்சன் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதுவொரு மதிப்புமிக்க படம், அதில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன் படக்குழிவில் சேர காத்திருந்தபோது, என் கதாபாத்திரம் மோனிஷாவுக்கு வழங்கப்பட்ட செய்தி என்ன்னை மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்கியதாக பேட்டியில் மாத்து தெரிவித்துள்ளார்.
வாய்ப்பு பறிபோன துக்கத்திலிருந்த மாத்துவை அவரது அம்மா தேவாலயத்திற்கு அழைத்து சென்று, இறைவன் முன் மண்டியிட்டு அழுதப்பின் மாத்து வீடு திரும்பினார். அதன்பின் தான் அமரம் படவாய்ப்பு மாத்துவுக்கு வந்துள்ளது. இதனால் கிறிஸ்துவ மதத்திற்கு ஈர்ப்பு ஏற்பட, பின் மதம் மாறிய மாத்து பெற்றோர்கள் ஆதரவுடன் தன்னுடைய பெயரை மாதவி என்பதை மீனா என்று மாற்றிக்கொண்டார்.

அதன்பின் வெளியான அமரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 200 நாட்கள் மக்களை கவர்ந்தது. பின் சந்தேகம், சதயம், ஏகலவ்யன் போன்ற படங்களில் நடித்தார். 2000 ஆம் ஆண்டு நடிப்பதை நிறுத்திய மீனா, தற்போது அமெரிக்காவிலுள்ள ஒரு ஐலாண்டில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். முதல் திருமணம் கைக்கூடாத நிலையில் 2வது திருமணம் முடித்து கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டா மாத்து என்கிற மீனா.