2-வது கணவர் மரணம்!! சிறுவயது நண்பருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்!! விஜய் பட நடிகை..
அஞ்சு அரவிந்த்
நடிகர் விஜய் நடித்து வெளியான பூவே உனக்காக படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அஞ்சு அரவிந்த். 1995ல் அக்ஷரம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, பார்வது ப்ரணயம், பூவே உனக்காக போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனையடுத்து, அருணாச்சலம் படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்தும் வானத்தைப்போல படத்தில் விஜயகாந்துக்கு மருமகளாகவும் நடித்தார். கடைசியாக கடந்த 2001ல் கண்ணா என்னை தேடுகிறேன் என்ற படத்தில் அஞ்சு அரவிந்த் நடித்தப்பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்.
பல ஆண்டுகள் ஆளே காணாமல் போன அஞ்சு அரவிந்த், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார்.
2-வது கணவர் மரணம்
அதில், ஆசைதம்பி படத்தின் போது எனக்கு நிச்சயதாத்தம் முடிந்தது. பூவே உனக்காக படம் பார்த்து தான் இந்த பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திருமணத்திற்கு பின் நான் படங்களில் நடித்து வந்தேன், வாஞ்சிநாதன் படம் திருமணத்திற்கு பின் நடித்தது. முதல் திருமணமாகி டைவர்ஸ் ஆகிவிட்டது. 2வது திருமணமாகி அவர் இறந்துவிட்டார்.
இப்போது நான் சஞ்சய் என்பவருடன் லிவ்விங் ரிலேஷஷிப்பில் இருக்கிறேன். பெங்களூருவில் எனக்கு டான்ஸ் டீச்சர் அடையாளத்தை கொடுத்தது அவர்தான். நான் 8வது படிக்கும்போது என் முதல் க்ரஷாக இருந்தவர் தான் இந்த சஞ்சய்.
நாங்கள் இருவரும் சேர்ந்து 96 படம் பார்த்தோம். அப்போது ஸ்கூல் நாட்கள் எனக்கு ஞாபகம் வந்தது. ஐடி வேலை செய்துகொண்டே சமூகசேவையும் அவர் செய்து வருகிறார். நான் அவரை சந்தித்ததே டான்ஸ் கிளாசில் தான். 5 வருடமாக சேர்ந்து வாழ்கிறோம்.
என் மகள் விஜய் சாரின் தீவிர ரசிகை. அவரை ஒருமுறை சந்திக்க முயற்சி செய்தும், நாங்கள் கொடுத்த மெசேஜ் அவருக்கு போகவில்லை. எனக்கு ஒரு மகள் தான், யூடியூப்பில் எதோ ஒரு சேனலில் எனக்கு 3 குழந்தைகள் இருப்பதாக கூறியதை என் மகள் பார்த்து, அந்த 3 குழந்தைகளை எங்கே ஒளிச்சி வெச்சுருக்க என்று கேட்கிறாள் என்று சிரித்தபடி அஞ்சு அரவிந்த் பகிர்ந்துள்ளார்.