வாய்ப்பிற்காக இப்படி இறங்கிட்டாரா? 9 வயது குறைவான இளம் நடிகருடன் ரொமான்ஸில் நடிகை அனுஷ்கா!

தென்னிந்திய சினிமாவின் கனவுக்கன்னியாக சில ஆண்டுகளுக்கு முன் ஜொலித்த நடிகை அனுஷ்கா செட்டி. ஆரம்பத்திலேயே க்ளாமருக்கு பஞ்சமில்லாமல் நடித்து கொடுத்து ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றார்.

விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல மொழி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். பாகுபலி படத்தின் மூலம் தேவசேனாவாக இருந்த அனுஷ்கா செட்டி இஞ்சி இடுப்பழகி படத்தில் ஏற்றிய உடம்பினால் தற்போது மார்க்கெட் இழந்து கஷ்டப்பட்டு வருகிறார்.

சமீபத்தில் சைலன்ஸ் படம் படுதோல்வியை பெற்றது. இதையடுத்து, வரும் படங்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார் அனுஷ்கா செட்டி.

அந்தவகையில், தெலுங்கு சினிமாவில் இயக்குநர் மகேஷ் இயக்கத்தில் இளம் நடிகர் நவீன் பாலிஷெட்டி என்பவருடன் ரொமாண்டிக் படத்தில் நடிக்கவுள்ளாராம். 9 வயது குறைவான நடிகருடன் நடிக்கவிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்