என்ன சிம்ரன் இதெல்லாம்!! ஆடை மாற்றும் வீடியோவை வெளியிட்ட சந்தானம் பட நடிகை ஆஷ்னா சவேரி..
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். அவர் படங்களில் பல இளம் நடிகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமாகி வருகிறார்கள்.
அந்தவகையில் 2014ல் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார் நடிகை ஆஷ்னா சவேரி.

இப்படத்தினை தொடர்ந்து இனிமேல் இப்படித்தான், மிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, கன்னித்திவு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
இதன்பின் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான MY3 படத்தில் நடித்திருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆஷ்னா, கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது ஆடை மாற்றி எடுத்த வீடியோவை பகிர்ந்து அனைவருக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.