17 வயது சிறுவன் என்னிடம் தவறாக நடந்து கொண்டான்.. ஸ்டார் பட நடிகை ஓபன் டாக்
அதிதி போஹங்கர்
அதர்வா நடிப்பில் வெளியான ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி போஹங்கர்.
பின் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
ஓபன் டாக்
இந்நிலையில், அவருக்கு சிறு வயதில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " CAICWA டீச்சராக அம்மா இருந்த நிலையில், சிறு வயதில் அவருடன் பேருந்தில் பயணித்தேன்.
அப்போது பயணி ஒருவர் தனது ஜிப்பை கழட்டி தவறான வேலையை பார்க்க, உடனடியாக எனது அம்மா எழுந்து நின்று அங்கிருந்தவர்கள் முன்பாக அந்த நபர் குறித்து சொன்னதும் அவர் பேருந்தில் இருந்து எழுந்து குதித்து விட்டார்.
அது போன்று நான் மும்பையில் ரயிலில் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் சென்று கொண்டிருந்தேன். அப்போது 17 வயது மாணவன் ஒருவன் எனது மார்பை அமுக்கி விட்டு சென்று விட்டான்.
அந்த நிலையில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கு இருந்த ஒரே கவலை இவன் மனதில் இது போன்ற தவறான எண்ணம் எப்படி வந்தது என்று தான்" என தெரிவித்துள்ளார்.