தலையெழுத்தை மாற்றிய ஒரே பாடல்!! ஒரே இரவில் சூப்பர் ஸ்டாரான நடிகை
சினிமாவில் தன்னுடைய நடன அசைவுகளுக்காக 30 நாட்கள் ஒத்திகை பார்த்த நடிகை அந்த ஒரு பாடலின் மூலம் ஒரே இரவில் சூப்பர் ஸ்டாராக மாறியிருக்கிறார். அவர் தான் நடிகை மாதுரி தீட்சித். 1988ல் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் தேசாப்.
மாதுரி தீட்சித்
இப்படத்திற்கு முன் மாதுரி பல தோல்வி படங்களை சந்தித்தப்பின் இப்படத்திற்கு பின் அவரது ரசிகர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்தது. அதுமட்டுமின்றி இன்றும் கூட அவரது ரசிகர்களின் பட்டாளம் அவரை கொண்டாடி வருகிறார்கள்.
தேசாப் படத்தில் ஒரு பாடலில் ஆட்டம் போட்டு ஒரே இரவில் டாப் நடிகையாக உருவெடுத்தார் மாதுரி. ;ஏக் தோ தீன் சார்; பாடலுக்காக 30 நாட்கள் ஒத்திகை பார்த்திருக்கிறார் மாதிரி. இப்படம் அவரின் 10 படத்தின் தோல்விகளுக்கு பின் கிடைத்து அதன்மூலம் இந்தி சினிமாவில் பெரிய இடம் கிடைத்துள்ளது.
ராம் லகான், பீட்டா, பிரேம் பிரதிக்னா, தில், சாஜன், பீட்டா, கல் நாயக், ஹம் ஆப்கே ஹை கவுன், ராஜா, தில் தோ பாகல் ஹை, புகார், தேவதாஸ், லஜ்ஜா, ஆஜா நச்லே போன்ற படங்கள் மாதுரி திட்சித்தின் பிளாக் பஸ்டர் படமாக விளங்கியது.