திருமணம் செய்துகொள்ளவில்லை.. 40 வயதில் கர்ப்பமான நடிகை! இரட்டை குழந்தை
1996ம் ஆண்டு தலு மொழியில் வெளிவந்த மாரிபலா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பாவனா ராமண்ணா. இவர் தமிழ், இந்திய கன்னடம் என பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாவனா ராமண்ணா திருமணம் செய்துகொள்ளாத நிலையில், கருத்தரிப்பு சிகிச்சை (IVF) மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி யுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளது, " புதிய அத்தியாயம், ஒரு புதிய தாளம். நான் இதை சொல்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இங்கு நான் இரட்டை குழந்தைகளுடன் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். நன்றியால் நிரம்பி வழிகிறேன். எனது 20 மற்றும் 30 வயதுகளில், தாய்மை என் மனதில் இல்லை. நாள், எனக்கு 40 வயதானபோது, அந்த ஆசை மறுக்க முடியாததாக இருந்தது. பல IVF கிளினிக்குகள் என்னை முற்றிலும் நிராகரித்தன" என பாவனா ராமண்ணா தெரிவித்துள்ளார்.
இதில் ஆச்சரியப்படும் விதமாக, பவானா முதல் முயற்சியிலேயே கருத்தரித்துள்ளார். தனது கர்ப்பத்தை ஜூலை 4, 2025 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள பாவனா ராமண்ணா, தனது பேபி பம்பை காட்டும் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள்..