47 வயசுலயும் குறையாத அழகு!! நடிகை பூமிகா சாவ்லாவின் அழகிய புகைப்படங்கள்..
பூமிகா சாவ்லா
விஜய் நடிப்பில் வெளிவந்த 'பத்ரி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா சாவ்லா. இதன்பின் சூர்யா நடிப்பில் வெளியான 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று தந்தது.
இன்று வரை அப்படத்தில் பூமிகா நடித்திருந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தை யாராலும் மறக்கமுடியவில்லை. தமிழில் மட்டுமின்றில், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய பல மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை பூமிகாவிற்கு ஒரு மகன் உள்ளார். இதனையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள பூமிகா, சமீபத்தில், பிரதர், ஸ்கூல் என்ற படங்களில் நடித்துள்ளார்.
புகைப்படங்கள்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூமிகா, 47 வயதிலும் குறையாத அழகில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.



