"மகன் வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி".. நடிகை பூமிகா ஓபன் டாக்
விஜய் நடிப்பில் 2001 -ம் ஆண்டு வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா.
இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த இவர் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். பூமிகா தென்னிந்திய படங்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பூமிகா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஹீரோக்கள் வயதான பிறகும் ஹீரோவாக தான் நடிக்கிறார்கள். ஆனால் கதாநாயகிகள் அப்படி கிடையாது. நிஜ வாழ்க்கையில் கூட அப்படி தான்.
அதிக வயது உடைய பெண்ணை திருமணம் செய்து கொள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் ஆண்கள் மட்டும் அதிக வயதான பிறகும் குறைந்த வயது பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்கள். என் மகன் வயது நடிகருடன் உடன் ரொமான்ஸ் செய்ய காட்சிகளில் என்னால் நடிக்க முடியும் என்று பூமிகா கூறியுள்ளார்.