அந்த மாதிரி காட்சிக்கு பின் வாழ்க்கையே மாறிடுச்சி!! உண்மையை கூறிய 47 வயது நடிகை
பாய்ஸ்
பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாய்ஸ். இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தில் குறிப்பிட்ட காட்சியில் இளைஞர்கள் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருவார்கள். அந்த பெண் ரோலில் சீரியல் நடிகை புவனேஸ்வரி நடித்திருந்தார்.

நடிகை விளக்கம
சமீபத்தில் இந்த காட்சியில் நடித்தது குறித்து விளக்கம் அளித்த புவனேஸ்வரி, " நான் சீரியல் நடித்து வந்த ஷங்கர் சாரின் பாய்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் இது போன்ற காட்சியில் நடிக்க தயக்கமாக இருந்தது. அதனால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன்.
"அப்போது இயக்குனர் ஷங்கர், ' இந்த காட்சியில் நடிக்கும் போது ஐந்து இளைஞர்களின் கைவிரல் கூட படாது' என்று உறுதியளித்தார்".
"அதன் பின்னர் நானும் பாய்ஸ் படத்தில் அந்த காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். இப்படத்திற்க்கு பிறகு எனக்கு தெலுங்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் அமைந்தது" என்று கூறியுள்ளார்.
