நடிகர் நாக சைதன்யா இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா? அடேங்கப்பா

Naga Chaitanya Sobhita Dhulipala Net worth
By Kathick Nov 24, 2025 04:30 AM GMT
Report

இந்திய அளவில் பிரபலமான தெலுங்கு நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் மூத்த முன்னணி நடிகரான நாகர்ஜுனாவின் மகன் ஆவார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த தண்டேல் படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

கடந்த ஆண்டு தனது காதலியான நடிகை சோபிதாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் இருவரும் சினிமாவில் பிசியாக வலம் வருகிறார்கள்.

நடிகர் நாக சைதன்யா இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா? அடேங்கப்பா | Telugu Actor Naga Chaitanya Net Worth

திரையுலகில் உள்ள பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்து அவ்வப்போது தகவல் வெளிவரும். இந்த நிலையில், நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 154 கோடி என கூறப்படுகிறது.

மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.