5 காலேஜ் பசங்க விரல் உங்கள் மீது படாது-ன்னு சொன்ன இயக்குனர்!! உண்மையை உடைத்த நடிகை புவனேஷ்வரி..
தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக 90 காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்து வந்தவர் நடிகை புவனேஷ்வரி. சீரியல் நடிகையாக அறிமுகமாகி அதன்பின் வெள்ளித்திரையில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இடையில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டப்பின் தற்போது சினிமாவில் இருந்து விலகிவிட்டார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

நான் நடிச்ச முதல் படம் இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் படம் தான். விபச்சாரப்பெண்ணாக கதை சொல்லும் போது 5 கல்லூரி பசங்க எப்படி நடந்துகொள்வார்களோ அப்படி நடிப்பார்கள்.
ஆனால் அவர்கள் விரல் கூட உங்கள் மீது படாது என்று சங்கர் சார் சொல்லியதால் அப்படத்தில் நடித்தேன்.
அதுதான் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தும் நல்ல வரவேற்பு பெற்றது என நடிகை புவனேஷ்வரி கூறியுள்ளார். மேலும் சீரியலுக்குள் வரும் போது பிரச்சனைகள் இல்லை.
ஆனால் வந்தப்பின் தான் பிரச்சனையே வந்தது. ஒரு பெண்ணுக்கு என்னெல்லாம் பிரச்சனை வருமோ எனக்கு வந்தது, அது சினிமாவில் இருப்பதால் தான்.