நடிகை சாந்தினியை விவாகரத்து செய்துவிட்டாரா அவரது கணவர்.. அவரை சொன்ன தகவல்!!
சாந்தினி
நடிகர் சாந்தனுவின் 'சிந்து +2' படத்தில் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் சாந்தினி.
அதன்பின், 'வில் அம்பு', 'நையப்புடை', 'கவண்', 'மன்னர் வகையரா', 'பில்லா பாண்டி' போன்ற படங்களில் நடித்தார். சினிமாவில் கதாநாயகியாக வாய்ப்புகள் குறைவாக இருந்ததால், சாந்தினி சின்னத்திரையில் 'தாழம்பூ' மற்றும் 'ரெட்டை ரோஜாவே' போன்ற தொடர்களில் நடித்தார். அதற்குப் பின்னர் 'குடிமகன்', 'பொம்மை', 'சைரன்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சாந்தினி, நான் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்.
அதில் என்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி பதிவிட விரும்பவில்லை. நான் கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருவதால் என் கணவர் என்னை விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகளை பரப்பி வருகிறார்கள். அதெல்லாம் உண்மையான தகவல் இல்லை. நாங்கள் 13 வருடம் காதலித்தோம், ஒன்றரை ஆண்டுகள் பிரேக் அப் செய்துகொண்டு பிரிந்துவிட்டோம். அதன் பின் மீண்டும் பேச ஆரம்பித்து திருமணம் செய்துகொண்டோம் என்று சாந்தினி தெரிவித்துள்ளார்.