சீரியல் நடிகருக்கு ஓகே சொல்லி கல்யாணத்தை ஃபிக்ஸ் செய்த டாப் நடிகை..காரணமே இதானாம்..
சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை ஒருவர் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கோலிவுட்டில் தனக்கென ஒரு பட்டாளத்தை வைத்திருக்கும் நிலையில் திடீரென சின்னத்திரையில், அதுவும் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் ஒரு சிரியலின் நாயகனை காதபிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டபோது, வெறும் நட்பாகத்தான் பலரும் நினைத்தனர். ஆனால் சமீபத்தில் இருவரும் ஜோடியாக வலம் வருவதும், ரகசியமாக டேட் செய்து வருவதும் வழக்கமாகிவிட்டது.
இந்த விஷயம் நடிகையின் பெற்றோருக்கு தெரிய, ஆரம்பத்தில் அவர்கள் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். வெள்ளித்திரையொல் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் உனக்கு ஒரு சீரியல் நடிகரா? என்று கூறி பஞ்சாயத்தை நடத்தினர். நடிகையோ காதலில் ஸ்ட்ராங்காக இருக்க, முக்கியமான காரணம் வெளியாகி சினிமா வட்டாரத்தையே அதிரவைத்துள்ளது.

பொதுவாக சினிமாவில்
இருக்கும் நடிகர்கள் பலரும் தங்களது இமேஜ்
மற்றும் ஈகோ காரணமாக நடிகைகளின் சுதந்திரத்தில்
தலையிடுவது வழக்கம், ஆனால் இந்த சீரியல்
நடிகரோ அப்படி இல்லையாம். அவர் அந்த
நடிகையின் சினிமா வளர்ச்சிக்கு எந்தவித
முட்டுக்கட்டையும் போடாமல், சப்போர்ட்
செய்துள்ளாராம்.
அதுமட்டுமின்றி, நடிகை ஒரு
பெரும் மன உளைச்சலில் இருந்தபோது
ஒட்டுமொத்த சினிமாயுலகமும் கைவிட்டபோதும்
சீரியல் நடிகர் மட்டுமே அவருக்கு பக்கபலமாக
இருந்துள்ளார். பணம், அந்தஸ்து, சினிமா இமேஜ்
என இதைவிடவும், தனக்கு மதிப்பும், உண்மையான
பாசமும் கொடுக்கும் ஒருவரே கணவராக
வேண்டுமென்று பெற்றோரிடம் கறாராக இருந்து
நடிகை சம்மதமும் வாங்கியிருக்கிறார். விரைவில்
இருவருக்கும் திருமணமும் நடக்கவுள்ளதாம்.