நாங்க தாசி தான்பா.. எங்கள அப்படி பாக்குற நீங்க யாரு!! கொந்தளித்த நடிகை தீபா..
சிறுசிறு ரோலில் பல படங்களில் நடித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலகலவென சிரித்து அனைவரையும் கவர்ந்திழுத்தவர் நடிகை தீபா. பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் தீபா சமீபத்தில் மகளிர் தினத்தன்று நடந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது வாழ்க்கையில் போராடி ஜெயித்த பெண்களை கவுரவிக்கும் வண்ணம் அவர்களுடன் நின்று சில கருத்துக்களை கூறி கொந்தளித்திருக்கிறார் தீபா.
தென்மாவட்டத்தில் பெண்கள் கொடுமைகளுக்கு ஆளாகும் போது வெளியில் சொல்ல கஷ்டப்படுவார்கள். ஆண்களுக்கு ஆசை இருக்கும் போது பெண்களுக்கு ஆசை இருக்காதா. அப்போதில் இருந்தே பெண்களை பல விசயம் சொல்லி பேசி வருகிறார்கள். பாட்டு பாட, ஆட எதுவும் பண்ணக்கூடாது என்று கூறியிருக்கிறார்கள். ஆண்கள் பெண்களை கொடுமைப்படுத்தாதீர்கள், அது ரொம்ப பாவம் என்றும் பெண்களை சாமியாக வணங்கணும் என்பதற்காக தான் கோயில்களில் பெண் கடவுள்.
அதை நினைக்காமல் பெண்கள் மீது ஆசிட் ஊற்றி அவள் வாழ்க்கையை சீரழிக்கிறீர்கள். பெண்களை பூ மாதிரி பார்க்க வேண்டும். பெண்களை தாசி என்று முத்திரை குத்தாதீர்கள். அப்போ, நாங்க தாசி தான்பா, எங்களை தாசியாக்குற உங்களை என்ன சொல்றது, ஊர்ல கரக்காட்டக்காரியை கூட்டிட்டு ஆடவெச்சு பார்க்கிறீங்களே? நீங்களாம் யாரு? அவ தாசின்னா நீ யாரு.
நடிக்கிறவ தாசி, அப்படியே நாங்க தாசியாக இருந்தாலும் எங்கள் உழைப்பில் எங்கள் பிள்ளைகளுக்கு சாப்பாடு போட்டு வயத்தை நிறைத்து வளர்த்து வைக்கிறோம். உன்னை மாதிரி குடிச்சிட்டு, ஊரழிஞ்சி சீரழியல. நான் எல்லா ஆண்களையும் தப்பு சொல்லவில்லை. எவன் இப்படியொரு பெண்ணை இப்படியாக்கினானே அவனை தான் சொல்கிறேன் என்று தீபா கொந்தளித்திருக்கிறார்.