அப்படி நான் போஸ் கொடுக்கவே இல்லை!! AI போட்டோவா அதிர்ந்து போன கீர்த்தி சுரேஷ்..
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா படம் வரும் 28 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் பிரமோஷன் வேலைகளை தொடங்கிய கீர்த்தி சுரேஷ், பத்திரிக்கையாளர்களை சந்தித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
AI போட்டோ
அதில், தொழில்நுட்பம் என்பது நாம் கண்டு பிடித்ததுதான். அது இன்றைக்கு நம்மை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது.
சோசியல் மீடியாக்களில் நான் பார்க்கும்போது, நான் இது போன்ற டிரஸ் போட்டேனா என்று நானே ஆச்சரியப்பட்டு பார்த்திருக்கிறேன். AI ஆல் உருவாக்கப்படும் புகைப்படங்களும் வீடியோக்களும் அவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது.
அண்மையில் நான் கலந்துகொண்ட படத்தின் பூஜையில் நான் அணிந்திருந்த ஆடைகளில் நான் வேறு மாதிரியான, தவறான கோணத்தில் புகைப்படங்கள் பகிரப்பட்டதை பார்த்து நானே அதிர்ச்சியடைந்து நான் இப்படி போஸ் கொடுத்தேனா என்று யோசித்தேன், அது நானே கிடையாது.

அது ரொம்பவும் எரிச்சலூட்டும் விதமாகத்தான் இருக்கிறது. இது எங்கு போகுதுன்னே தெரியல, தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகிறது என்று கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.