கோடியில் பீச் ஹவுஸ்!! நடிகை தீபிகா படுகோனின் அசரவைக்கும் சொத்து மதிப்பு
தீபிகா படுகோன்
கன்னடத்தில் ஐஸ்வர்யா என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் தீபிகா படுகோன். அதன்பின் ஷாருக்கானின் 'ஓம் சாந்தி ஓம்' திரைப்படம் இவருக்கு பாலிவுட்டில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கியது.
பல படங்களில் நடித்து தற்போது, பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை தீபிகா. இவர் கடந்த 2018 -ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர் கடைசியாக கல்கி 2898 கி.பி படத்தின் முதல் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த நேரத்தில் தீபிகா கர்ப்பமாக இருந்தார் சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
இந்நிலையில், இன்று தனது 39 - வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை தீபிகாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஒரு படத்தில் நடிக்க ரூ. 15 முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் பெரும் தீபிகாவுக்கு ரூ 500 கோடி வரை இருக்கும் என ஒரு ரிப்போர்ட் கூறுகின்றது. மேலும், ரூ. 100 கோடி மதிப்பில் ஆடம்பரமான பீச் ஹவுஸ் ஒன்றையும் வைத்துள்ளார் என சொல்லப்படுகிறது.