டீசண்ட்டா பேசி அந்த விஷயத்திற்கு கூப்பிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை அதிர்ச்சி

Serials Tamil Actress
By Dhiviyarajan Mar 19, 2023 10:18 AM GMT
Report

சின்னத்திரையில் வில்லி ரோல்களில் நடித்து மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் தான் நடிகை தேவி பிரியா. இவர் சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

டீசண்ட்டா பேசி அந்த விஷயத்திற்கு கூப்பிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை அதிர்ச்சி | Actress Devi Priya Speak About Sexual Harassment

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தேவி பிரியா தனது வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வுகளை பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர், 'சில தினங்களுக்கு முன்பு பெங்களூரிலிருந்து ஒரு போன் கால் வந்தது. அதில் ஒருவர் என்னிடம் ஆங்கிலத்தில் டீசண்டாக பேசினார்'.

'அப்போது அந்த நபர், பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது உங்களால் இங்கு வர முடியுமா? என்று கேட்டார். நான் அதற்கு நிகழ்ச்சி நடக்கும் நாள் அன்று வருகிறேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் சென்று விடுவேன் என்று கூறினேன்'.

'அந்த நபர் மீண்டும் என்னிடம் நீங்கள் இரவு விருந்தில் பங்கேற்க வேண்டும் என கூறினார். நான் அதெல்லாம் என்னால் முடியாது என்று மறுத்தேன். கடைசியில் அவர்கள் எந்த நோக்கத்தின் அடிப்படையில் என்னை அழைத்தார்கள் என்று புரிந்து கொண்டேன்' என்று தேவி பிரியா கூறி இருக்கிறார். 

டீசண்ட்டா பேசி அந்த விஷயத்திற்கு கூப்பிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை அதிர்ச்சி | Actress Devi Priya Speak About Sexual Harassment