5 வயதில் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த நடிகை!! இப்போ ரூ.2000 கோடி வசூல் பட நாயகி?
பாத்திமா சனா ஷேக்
பாலிவுட் சினிமாவில் இளம் வயதிலேயே நடிக்க ஆரம்பித்து டாப் நடிகையாக தன்னுடைய திறமையால் ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை பாத்திமா சனா ஷேக். தங்கல் படத்தில் நடித்து பெரியளவில் அங்கீகாரம் பெற்ற பாத்திமா, ஜனவரி 1992ல் ஹைதபாத்தில் பிறந்து மும்பையில் வளர்ந்தார்.
5 வயதில் திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய பாத்திமா, 1997ல் வெளியான பிளாக்பஸ்டர் படமான சாச்சி 420 படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன்னுடைய இனிமையான புன்னகை, அப்பாவித்தனமான முகத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

சாச்சி 420 படத்தில் கமல் ஹாசனின் மகளாக நடித்த பாத்திமா, 2001ல் ஷாருக்கான், ஜூஹி சாவ்லாவுடன் ஒன் 2 கா 4 படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 10 வயதை எட்டுவதற்குள் முன்னணி நடிகர்களுடன் பணிபுரியும் வாய்ப்பை பெற்ற பாத்திமா, 2008ல் வெளியான தஹான் படத்தில் நாயகியாக அறிமுகமாகினார்.
2016ல் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் மகளாக தங்கல் படத்தில் நடித்து மிகப்பெரியளவில் பிரபலமானார். அப்படம் வசூலில் ரூ. 2000 கோடியை அள்ளியதோடு, பாத்திமாவின் நடிப்பும் பாராட்டை பெற்றது.

ரூ.2000 கோடி வசூல் பட நாயகி
இதனையடுத்து தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான், லுடோ போன்ற படங்களிலும் அஜீப் தாஸ்தான்ஸ், மாடர்ன் லவ் மும்பை என்ற தொடர்களிலும் நடித்தார். 2023ல் வெளியான சாம் பகதூர் படத்தில் இந்தியா காந்தியாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

தற்போது நடிகர் விஜய் வர்மாவுக்கு ஜோடியாக குஸ்தாக் இஷ்க் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் நவம்பர் 28 ஆம் தேதி ரிலீஸாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.