அந்த நடிகர் ஒரே நைட்டில் என்னை ஏமாத்திட்டாரு!! பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஹீரா..
ஹீரா ராஜாகோபால்
தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஹீரா ராஜாகோபால். முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த ஹீரா கடைசியாக சுயவரம் என்ற படத்தில் நடித்திருந்தார். 1999க்கு பின் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார்.
என்னை ஏமாத்திட்டாரு
இந்நிலையில் நடிகை ஹீரா பெயரில் இருக்கும் சமூகவலைத்தள பக்கம் ஒன்றில் என் மீதும் இளம் வயதில் திட்டமிட்டு சுமத்தப்பட்ட பழிகளால் மன உளைச்சலுக்கு நான் ஆளானேன். நான் ஒரு நடிகரை பல வருடங்களாக காதலித்தேன், ஆனால் அவரோ நான் ஏமாற்றுக்காரி, போதைக்கு அடிமையாகிவிட்டேன் என்றெல்லாம் பொய் பரப்புரை செய்து அசிங்கப்படுத்தினார்.
நான் அந்த நடிகரை காதலித்தபோது அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அவருக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் நான் இருந்தேன். அவர் படுத்த படுக்கையாக இருந்தபோது அவரது பெட்பான் உள்ளிட்டவைகளை எல்லாம் மாற்றினேன். ஆனால் அந்த அறுவை சிகிச்சையில் இருந்து அவர் மீண்டப்பின் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். ஒரே இரவில் அவர் கொடுமையான மனிதராக மாறிவிட்டார். என்னுடைய கெளரவம், நேர்மை மீது அவர் தனிப்பட்ட ரீதியான தாக்குதல்களை நடத்தினார். அவை அனைத்தும் என்னை மன வேதனைக்கு உள்ளாக்கியது. இதன்காரணமாக தற்கொலைக்கும் முயன்றேன்.
என்னுடனான உறவை அவர் எந்த விளக்கமும் இல்லாமல் பிரேக் அப் செய்தார். ஒருமுறை ஒரு ஸ்டுடியோவில் அவரை சந்தித்தபோது ரொம்பவே அழுதேன். வெளியே உண்மையை சொல்லுங்கள் என கெஞ்சினேன். ஆனால் அவரோ, வேலைக்காரி போல் இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்வேன், எனக்கு யார் வேண்டுமோ அவர்களுடன் சென்று என்னால் இருக்க முடியும் என்று கூறினார் என ஹீரா அதில் கூறியிருக்கிறார்.
யார் அந்த நடிகர்?
நடிகை ஹீராவின் இந்த பதிவுகள் வெளியான சில மணி நேரத்தில் அவரின் அந்த சமூக வலைத்தள பக்கம் முடக்கப்பட்டது. மேலும் ஹீரா, எந்த நடிகரை அப்படி சொல்கிறார்? அது அஜித்தை தான் சொல்கிறாரா? இல்லை வேறு ஒரு நடிகரை சொல்கிறாரா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர் என்றால் அது அஜித் தானா? என்றும் சில குறிப்பிட்டு, ஹீராவின் அந்த பதிவினை வைரலாக்கி வருகிறார்கள்.