பல லட்சம் மோசடி!! சீரியல் நடிகை ராணிக்கு வலைவீசும் போலிஸ்..
நடிகை ராணி
சின்னத்திரை சீரியல்களில் நடித்தும் வெள்ளித்திரை படங்களில் நடித்தும் பிரபலமானவர் நடிகை ராணி. நாகம்மா, வள்ளி, குலதெய்வம், அத்திப்பூக்கள், சீதா ராமன் உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லி ரோலில் நடித்து பிரபலமானார் ராணி.

இந்நிலையில், ரூ. 10 லட்சம் மற்றும் பிஎம்டபிள்யூ கார், 5 சவரம் நகைகள் உள்ளிட்டவற்றை வாங்கி மோசடி செய்ததாக கூறி கரூரில் ஹோட்டல் அதிபர் தினேஷ்ராஜ் புகாரளித்துள்ளார்.
சீரியல் நடிகை ராணியின் கணவர் பாலாஜி, தினேஷ் ராஜிடம் இதையெல்லாம் வாங்கியிருக்கிறார். கஷ்டத்தில் இருந்த தினேஷ்ராஜ், பணத்தேவை இருப்பதாக கூறி அதையெல்லாம் திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அதை தரமறுத்து ஏமாற்றியிருக்கிறார் பாலாஜி.

இதனடிப்படையில், பாலாஜி மற்றும் தொலைக்காட்சி நடிகை ராணி உள்ளிட்ட மூவர் மீது தினேஷ் ராஜ் புகாரளித்துள்ளார். கொலை மிரட்டல் உள்ளிட்ட பல பிரவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலிசார்.
ராணி எங்குள்ளார் என்று கரூர் போலிஸ் தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.