முன்பதிவில் இதுவரை ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்

Vijay Box office JanaNayagan
By Kathick Dec 29, 2025 12:30 PM GMT
Report

விஜய் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்று முடிந்தது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக இப்படத்தின் டிரைலரை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

முன்பதிவில் இதுவரை ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Jananayagan Pre Booking Collection Details

வருகிற ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவுள்ள ஜனநாயகன் படத்தின் முன்பதிவு கடந்த வாரத்தில் இருந்து தொடங்கி அமோகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், முன்பதிவில் ஜனநாயகன் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் இப்படம் ரூ. 7.5 கோடி வசூல் செய்துள்ளது.