ராத்திரி நேரத்தில் பிரபல நடிகையின் வீட்டிற்குள் சென்ற காந்த் நடிகர்.. உண்மை உடைத்த பிரபல நடிகை..
70, 80-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹீமா சௌத்ரி. கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1976 -ம் ஆண்டு வெளிவந்த மன்மத லீலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளும் நடித்து மக்கள் மத்தியில் பாப்புலராக மாறினார். சமீபத்தில் பேட்டி ஒன்றில், ஆக்ட்டிங் பள்ளியில் படிக்கும் போது, ரஜினிகாந்தும் மாணவராக சேர்ந்தார்.
சில நாட்கள் கழித்து நாங்கள் நண்பர்களாக ஆனோம். எனக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அங்கு இருந்து நான் சென்றுவிட்டேன். ஆனால் ரஜினிகாந்திற்கு அப்போது எந்த பட வாய்ப்பும் வரவில்லை.
அதிக நேரம் தனிமையில் தான் இருப்பார். ஒரு நாள் அவருக்கு கே பாலச்சந்தர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதை சொல்ல நள்ளிரவில் என் வீட்டிற்கு வந்தார்.
என் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி சென்றார். இப்பொது சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் எளிமையாக தான் நடந்து கொள்கிறார்" என பேட்டியில் கூறியிருந்தார்.