அந்த காட்சிகளில் அப்படி நடந்து கொண்ட இளம் நடிகர்! நடிக்க துடிக்கும் 61 வயது நடிகை..?
சினிமா உலகில் நடிகையாகவும் எழுத்தாளராகவும் வலம் வரும் பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய 61 வயதில் இளம் நடிகர்களுடன் அந்தரங்க காட்சிகளில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எம்மா தாம்சன் என்ற ஹாலிவுட் நடிகை சமீபத்தில் வயதான ஆண்கள் இளம் நடிகைகளுடன் அந்தரங்க காட்சிகளில் நடிப்பது போல், வயதான பெண்களும் இளம் நடிகர்களுடன் அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க வேண்டும் என வற்புறுத்தி வருகிறார்.
ஹாலிவுட் சினிமாவில் கிளுகிளுப்பு காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. 90% படங்களில் ஹீரோ ஹீரோயின்கள் இருவருக்கும் அந்தரங்க காட்சிகளை வைத்து விடுவார்கள்.
அதிலும் பாரபட்சம் இருப்பதாக நடிகை எம்மா தாம்சன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது 60 வயதிற்கு மேல் உள்ள நடிகர்கள் கூட இளம் நடிகைகளுடன் அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க ஆசைப்படுகிறார்கள்.
ஆனால் வயதான பெண்களுடன் அப்படி செய்ய தயங்குகின்றனர். அதேபோல் இனி 60 வயதுக்கு மேல் உள்ள நடிகைகளும் இளம் நடிகர்களுடன் அந்த மாதிரி காட்சிகளில் நடித்து தங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹாலிவுட் சினிமாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பாரபட்சம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனிமேல் எம்மா தாம்சன் இளம் நடிகர்களுடன் மட்டுமே ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார். 61 வயதான இந்த நடிகையின் பேச்சு தற்போது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.