இயக்குநர் பாலாவால் இந்த வாய்ப்பை இழந்த நடிகை ஜனனி! தங்கையுடன் கடைசியில் இந்த முடிவா?
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படத்தினை எடுக்கும் பல இயக்குநர்களில் வித்தியாசமான தோற்றத்தில் எடுத்து ஹிட் கொடுப்பவர் இயக்குநர் பாலா. தனக்கென ஒரு பாணியில் படங்களை தத்ரூபமாக எடுக்கூடிய இயக்குநர் பாலா. உடலை வறுத்தியும் விருதுகளை வாங்க எவ்வளவு உழைக்க முடியுமோ அந்த அளவிற்கு திறனை போட்டு எடுத்து வருகிறார்.
அந்தவகையில் ஆர்யா, விஷாலை வைத்து எடுத்த படம் அவன் இவன். அப்படத்தில் பெரியளவில் நம்பி நடித்தவர் நடிகை ஜனனி. இன் ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தபின் நடிகை ஜனனி ஆஸ்திரேலியா செல்லவிருந்தாராம். அப்போது பாலாவிடம் இருந்து அழைப்பு வந்ததால் ஆஸ்திரேலியா செல்வதை நிறுத்தி படத்தில் நடிக்க சென்று விட்டாராம். தன் வாழ்க்கையில் பாலா படம் திருப்பு முனையாக இருக்கும் என்று எண்ணி படங்களில் நடித்து வந்தும் பெரியளவில் வெற்றி பெறாமல் இருந்து வருகிறார் நடிகை ஜனனி.
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் போதுமான படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார். தற்போது அவருடைய தங்கையுடன் இணைந்து வெளிநாட்டு இறக்குமதி ஆடைகள் சம்மந்தமான கடைக்கு விளம்பரம் செய்தும் வருகிறார் ஜனனி. சமீபத்தில், தன் பெயரில் இருக்கும் ஜாதி பெயரான ஐயர் என்பதை எடுத்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.