ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் தமிழ் ரீல்ஸ் வீடியோ.. வியக்கும் ரசிகர்கள்..

Anirudh Ravichander Photoshoot Janhvi Kapoor Indian Actress N. T. Rama Rao Jr.
By Edward Sep 18, 2024 09:15 PM GMT
Edward

Edward

Report

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் ஜூனியர் என் டி ஆரின் தேவரா படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முதன்முதலில் தென்னிந்திய சினிமாவில் தேவரா படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் தமிழ் ரீல்ஸ் வீடியோ.. வியக்கும் ரசிகர்கள்.. | Actress Janhvi Kapoor Chennai Devara Promotion

சமீபத்தில் அனிருத் இசையில் தேவரா படத்தின் முதல் சிங்கிள் பாடல் சுட்டாமல்லி பாடலை தொடர்ந்து தாவூதி பாடலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவ்விரு பாடலுக்கும் ஜான்வி கபூர் கிளாமர் காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

இப்படம் செப்டம்பர் 27 ஆம்தேதி வெளியாகவுள்ள நிலையில் ஜான்வி கபூர், படத்தின் பிரமோஷனுக்காக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மேடையில் பேசிய ஜான்வி கபூர், தமிழில் அப்படியே பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். வெள்ளை சேலையில் மின்னிய ஜான்வி கபூர், ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.