மும்பையில் செட்டிலாகி ஜோதிகாவா இது!! வெறித்தனத்தின் உச்சிக்கே சென்ற சூர்யா மனைவியின் ஒர்க்கவுட் வீடியோ
நடிகர் அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான வாளி படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஜோதிகா. இப்படத்தினை தொடர்ந்து சூர்யா, அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்ட தமிழ் நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் ஜோதிகா.
இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த ஜோதிகா சூர்யாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்து காதலில் விழுந்தார். 4 வருட காதலுக்கு பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா இரு குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பத்தினை பார்த்து வந்தார். பிள்ளைகள் வளர்ந்த பின் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார் ஜோதிகா.
சமீபத்தில் மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் ஜோதிகா கணவருடன் மும்பையில் தனியாக வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார் என்றும் பெற்றோரிடமிருந்து பிரித்துவிட்டார் என்று விமர்சனங்கள் எழுந்தது.
இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஜோதிகா பாலிவுட் படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தலைகீழாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். இதற்கு சினிமா நட்சத்திரங்களும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.