சூப்பர் ஹீரோயினுக்கு அம்மா..இயக்குனரை விவாகரத்து செய்த பிரபல நடிகை..
கல்யாணி பிரியதர்ஷன்
மலையாளத்தில் வெளியாகி தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் சிறப்பான விமர்சனத்தையும் பெற்று வரும் படம் தான் லோகா சாப்டர் 1. தற்போது ரூ. 125 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படத்து வரும் லோகா படத்தில் கதாநாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார்.
இதுவரை தென்னிந்திய சினிமாவில் சோலோ நடிகை படம் 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸ் பெற்றதில்லை. தற்போது அந்த முதல் இடத்தை நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பிடித்திருக்கிறார். பல மொழிகளில் வெளியாகியுள்ள லோகா படம் பாலிவுட் பிரபலங்களையும் கவர்ந்துள்ளது.
கல்யாணியின் அப்பா பிரியதர்ஷன் பிரபல இயக்குநராக இருக்கும் நிலையில், அவரது அம்மா மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக 1980களில் வலம் வந்தார்.
கல்யாணியின் அம்மா லிஸி, 1982ல் வெளியான இந்திரி நேரம், ஒந்திரி கார்யம் உள்ளிட்ட படங்களில் நடித்து அறிமுகமாகினார். அதன்பின் 1986 வெளியான கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்.
பின் 1990ல் இயக்குநர் பிரியதர்ஷனை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்துக்கொண்டார். கடந்த 2018ல் சால் மோகன் ரங்கா என்ற தெலுங்கு படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறார் லிஸி. 2016ல் கணவர் பிரியதர்ஷனை விவாகரத்து செய்து பிரிந்தார் நடிகை லிஸி.