38 வயதான ஜெயம் ரவி பட நடிகை காம்னா ஜெத்மலானியா இது!! அவருக்கு இரு மகள்கள் இருக்காங்களா..
தெலுங்கு சினிமாவில் பிரேமிகுலு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் இதய திருடன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை காம்னா ஜெத்மலானி.
இதய திருடன் படத்திற்கு பின் மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடித்து வாய்ப்பில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார் நடிகை காம்னா.
2014ல் பெங்களூர் தொழிலதிபரான சுராஜ் நாக்பால் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார். பெங்களூருவில் செட்டிலாகிய காம்னா இரு பெண் குழந்தைகளை பெற்று வளர்த்து வருகிறார்.
தற்போது மீண்டும் வெப் தொடர் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காம்னா, திருமணத்திற்கு பின்பும் தன்னுடைய 38 வயதில் கவர்ச்சி லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் உடல் ஆரோக்கியம் பற்றிய ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

