யார் இந்த முட்டாள்!! ஆள்மாறாட்டம் செய்த நபரை வெளுத்து வாங்கிய நடிகை ஸ்ரேயா..
ஸ்ரேயா சரண்
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். திருமணமாகி குழந்தை பெற்றும் கிளாமர் லுக்கில் கலக்கி வருகிறார். அண்மையில் கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ் நடித்துள்ள மிராய் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்ரேயா சரண், தன் பெயரை பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரப்பும் நபரை சமூகவலைத்தளங்கள் மூலம் கடுமையாக எச்சரித்துள்ளார். அதில், என் பெயரில் எழுதுவது நிறுத்து, வேறு ஒரு வேலையை பார் என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோயில் பதிவிட்டுள்ளார்.
யார் இந்த முட்டாள்
யார் இந்த முட்டாள்? தயவுசெய்து போலியாக மெசேஜ் செய்து நேரத்தை விணடிப்பதை நிறுத்துங்கள். மக்களின் நேரத்தை வீணடிப்பதில் நான் வருத்தப்படுகிறேன், இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது.

இந்த எண் என்னுடையது அல்லா, இந்த நபர் என்னைப்போல், என்னுடன் பணி செய்ய விரும்பும் நபர்களிடம் பேசுகிறார். இப்படியான செயல்களில் உங்கள் நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்? ஆள்மாறாட்டக்காரராக இல்லாமல், ஒரு நல்ல வாழ்க்கையை தொடருங்கள் என்று கொந்தளித்து ஒரு போஸ்ட்டை பகிர்ந்திருக்கிறார்.