விஜய், அஜித்துக்கு அந்த பழக்கமே இல்ல..ஆனா ரஜினி!! இசையமைப்பாளர் தேவா ஓபன் டாக்..
Ajith Kumar
Rajinikanth
Vijay
Deva
Tamil Actors
By Edward
இசையமைப்பாளர் தேவா
80-களில் இருந்து இசையமைப்பாளராக அறிமுகமாகி ரஜினி, விஜய், அஜித், சத்யராஜ், கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
சமீபத்தில் தேவா அளித்த பேட்டியொன்றில் ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்கள் நடந்து கொள்ளும் விதம் பற்றி பகிர்ந்துள்ளார்.

அதில், விஜய், அஜித்திற்கும் பல ஹிட் பாடலை கொடுத்திருக்கிறேன். ஆனால் அவங்க இரண்டு பேரும் கம்போசிங்கிற்கு எல்லாம் வரமாட்டார்கள்.
நான் ரொம்ப பிராங்கா சொல்கிறேன், என் பாட்டை எந்த ஹீரோவும் பாராட்டவே மாட்டார்கள். ஆனால் ரஜினி சார் ஒருத்தர் மட்டும் தான் போன் பண்ணி பாராட்டுவார்.
நானும் பார்த்தேன், சரி மத்த நடிகர்களுக்கு எல்லாம் அந்த பழக்கமே இல்ல போல என்று விட்டுவிட்டேன் என்று தேவா வெளிப்படையாக பேசியுள்ளார்.