அந்த குளியறை வீடியோ..சமந்தா, திரிஷாவுக்கு வராததா எனக்கு வந்துச்சு!! பிரபல நடிகை ஓபன் டாக்
கஸ்தூரி
மிஸ் சென்னை பட்டம் வென்று ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் நடித்து, 90களில் தென்னிந்திய சினிமாவில் பலராலும் கவனிக்ககூடிய நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை கஸ்தூரி. தற்போது அரசியல் விமர்சகராக இருந்து வரும் கஸ்தூரி சமீபத்தில் பேட்டியொன்றில் ஒருசில விஷயங்களை கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அதாவது, திரைக்கதை மன்னன் பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வந்த கஸ்தூரி, சிரித்துக் கொண்டிருந்தார் என்று சொல்லி வீடியோ வைரலானது. மேலும், குடித்துவிட்டு டான்ஸ் ஆடுவதாகவும் வீடியோ ஒன்று பரவி, பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
குளியறை வீடியோ
இந்நிலையில் அதுகுறித்து விளக்களித்த கஸ்தூரி, குத்து விளக்கு பாடலுக்கு ஆடியது பற்றி என்னுடைய குழந்தைகள் ஆச்சரியப்படுகிறார்கள். நல்ல மீடியாக்கள் அதனை பாராட்டுகிறார்கள். கஸ்தூரி என்று சொல்லி நல்லதும் வருது கெட்டதும் வருது.

இது எனக்கு மட்டும் நடக்கவில்லை, சமந்தா, திரிஷாவுக்கு வராததா எனக்கு வந்துவிட்டது. ஏதோ ஒரு பெண் ஷவரில் குளிக்கிறார், அது பெண்ணா, ஆணா என்றுகூட தெரியவில்லை, இருந்தாலும் அதை மொபைலில் பார்த்துக் கொண்டுதானே இருந்தோம்.
இப்போது ஏஐயில் ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வந்ததுதானே, அதையும் பார்க்கத்தானே செய்தார்கள். நான் குடிக்கவில்லை, அந்த வீடியோவில் இருப்பது இல்லை என்று நான் சொன்னால், அது ஏஐ என்று நான் நிரூபிக்க வேண்டும். எது உண்மை எது பொய் என்று எனக்கே தெரியவில்லை என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.