17 வயதில் விஜய் சேதுபதிக்கு மகள்!! 3 படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்...
கிரித்தி ஷெட்டி
இந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது டாப் நடிகையாக உச்சம் தொட்ட நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அப்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் நடித்த சூப்பர் 30 என்ற படத்தில் சிறுமி ரோலில் நடித்தவர் தான் கிரித்தி ஷெட்டி.

இப்படத்தை தொடர்ந்து தன்னுடைய 17வது வயதில் விஜய் சேதுபதி நடித்த உப்பனா என்ற படத்தில் அவருக்கு மகளாக நடித்தும் ஹீரோயினாக அறிமுகமாகினார் கிரித்தி.
இப்படத்தை தொடர்ந்து ஷ்யாம் ஷிங்க ராய், பங்காராராஜு, தி வாரியர், கஷ்டடி, மனமே உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார்.
3 படங்கள்
தற்போது வா வாத்தியார், லவ் இன்சூரன்ஸ் கொம்பனி, ஜீனி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில், டிசம்பர் மாதம் இந்த மூன்று படங்களில் வா வாத்தியார் 12 ஆம் தேதியும் LIK படம் 18 ஆம் தேதியும் ரிலீஸாகவுள்ளது.

ஜீனி படத்தின் ரிலீஸ் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வேல்ஸ் பிரொடக்ஷன் நிறுவனம் அறிவிக்கவில்லை.