கனவுக் கன்னி நடிகை ரேவதியின் லேட்டஸ்ட் போட்டோ.. அட ஆளே மாறிட்டாரே
ரேவதி
80 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. 1983ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
நடித்த முதல் படத்திலேயே மிகப் பெரியளவில் வெற்றிப் பெற்று சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். அதன் பின் ரேவதியின் மார்க்கெட் உயர அடுத்தடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி திரையுலகிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.
மௌன ராகம், புன்னகை மன்னன், கிழக்கு வாசல், தேவர் மகன், மறுபடியும், அஞ்சலி, மகளிர் மட்டும் என அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் அவரின் நடிப்பு திறமையை மக்களுக்கு எடுத்து காட்டியது.
நடிகையாக மட்டுமின்றி இயக்குநராகவும் வலம் வந்தார். அந்த வகையில் தற்போது, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார்.
லேட்டஸ்ட் போட்டோ
இந்நிலையில், பிரபல சீரியல் நடிகர் அரவிந்துடன் நடிகை ரேவதி ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
போட்டோவை பார்த்த ரசிகர்கள் 80களின் கனவுக் கன்னி ரேவதி என்ன இப்படி ஆகிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.