43 வயசுல தான் கல்யாணம் ஆச்சு.. சினிமால வந்ததுக்கு அதையே பண்ணி சம்பாதிச்சு இருக்கலாம்!! நடிகை லாவண்யா தேவி..
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சினிமாத்துறையில் நடித்தும் பெரிய இடத்தினை பிடிக்காமல் காணாமல் போன நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். அப்படி தான் கிட்டத்தட்ட 1997ல் சினிமாத்துறையில் நடிக்க ஆரம்பித்து தற்போது வரை தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் காணாமல் போயிருக்கிறார் நடிகை லாவண்யா தேவி.
சூர்யவம்சம் படத்தில் ஸ்வப்னா என்ற சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்தவர், படையப்பா, சங்கமம், ஜோடி, சேது, தெனாலி, சமுத்திரம், வில்லன், அலை, திருமலை, கஜேந்திரன், தலைமகன் உள்ளிட்ட பெரிய படங்களில் சிறுசிறு ரோலில் நடித்து பிரபலமானார். அதன்பின் 2014ல் நான் தான் பாலா படத்தில் கடைசியாக நடித்து சினிமாவில் இருந்து விலகிவிட்டார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் பகாசுரன் படத்தில் நடித்திருக்கிறார் நடிகை லாவண்யா ரவி. மேலும் ஒருசில சீரியலில் நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், எனக்கு இப்போது தான் கல்யானமாகியதாகவும் கடந்த ஆண்டு தான் ஒரு வருட திருமண நாளை கொண்டாடியதாகவும் கூறிருக்கிறார் லாவண்யா. சினிமாவில் சிறு ரோல்களில் நடிக்க கூப்பிடும் போது கஷ்டமாக தான் இருக்கும் என்றும் பல படங்களில் நான் நடித்த சில காட்சிகள் படம் வெளியாகி பார்க்கும் போது இருக்காது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், சங்கமம் படத்தின் போது, ரஹ்மான் சார் பாவம். அப்படத்தின் ஆட்டம் ஆடும் காட்சியில் எனக்கு கண்ணில் இன்ஃபெக்ஷன் வந்தது. கேரவன் அந்த காலத்தில் இல்லாத போது, ஆடை மாற்றும் போது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. வீடு செட்டப் இருக்கும். ஆனால், வேஸ்டிகள் கட்டி இருக்கும் அங்க தான் ஆடை மாற்றுவோம். அதன்பின் தான் இந்த கஷ்டத்தை பார்த்து மணிவண்ணன் அவரது கேரவன் எடுத்து வந்து எங்களை மாற்ற சொல்வார்.
பல படங்களில் ஓப்பன் இடத்தின் பயந்து கொண்டு தான் ஆடையை மாற்றுவோம் என்று கூறியிருக்கிறார். பல படங்கள் ஹீரோயினாக நடிக்க கேட்டிருக்கிறார்கள். பெரிய படங்கள் கேட்கவில்ல சிறு பட்ஜெட் படம் தான் கேட்டிருக்கிறார்கள். ஆனால் சில கண்டீசன் போடுவார்கள். கிளாமராக நடிக்கணும் என்று தான் கேட்பார்கள் என்று லாவண்யா தெரிவித்துள்ளார்.
சினிமாவில் வந்ததால் பொருளாதாராத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நல்லா படித்திருந்தால் ஆபிஸ்லயாவது மாத சம்பளத்திற்கு வேலை பார்த்திருக்கலாமே என்று தோன்றும். ஆனால், இந்த மாதிரியான ஒரு ஃப்ரேம் எனக்கு கிடைத்திருக்காது என்றும் ரொம்ப வருத்தப்பட்டது எல்லாம் கிடையாது என்றும் கூறியிருக்கிறார்.