17 வயதில் கால்-ஐ இழந்த சோகம்!! 60 வயதாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாத பிரபல நடிகை...
சுதா சந்திரன்
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சுதா சந்திரன். மும்பையில் பிறந்த சுதா, திருச்சிக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தனர். தன்னுடைய் 17 வயதில் திருச்சியில் விபத்து ஒன்றில் சிக்கியதில், அவரது கால் பாதிகப்பட்டது.
காலை அகற்றியாக வேண்டும் என்று மருத்துவர் கூறியதால் செயற்கை காலை பொருத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் சுதா சந்திரன்.

கால்-ஐ இழந்த சோகம்
சமீபத்தில் அவரளித்த பேட்டியில், அந்த விபத்துக்கு பின் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். என்னால் நடக்கமுடியாது என தெரிந்தபோது அதிர்ச்சியடைந்தேன். என் குடும்பம்தான் எனக்கு ஆதரவாக இருந்து என்னை வழி நடந்த்தினர்.
அவர்களால்தான் நான் மீண்டு வந்தேன் என்று கூறியிருக்கிறார். பரத நாட்டிய கலைஞராக இருந்த சுதா, விபத்துக்கு பின் நடனத்தை கைவிடலாம் என்ற முடிவில் இருந்தபோது அவரது குடும்பத்தினர் உத்வேகத்துடன், செயற்கை கால் வைத்துக்கொண்டு மேடையில் நடனமாகி அசத்தினார்.

1984ல் மயூரி என்ற தெலுங்கு படத்தில் நடிகையாக அறிமுகமாகி, தொடந்து இந்தியிலும் கவனம் செலுத்தினார். தமிழில் 1986ல் வெளியான தர்மம் படத்தில் அறிமுகமாகி, நம்பினார் கைவிடுவதில்லை, வசந்த ராகம், சின்ன தம்பி பெரிய தம்பி, சின்ன பூவே மெல்ல பேசு போன்ற படங்களில் நடித்தார்.
2008ல் விஷால் நடிப்பில் வெளியான சத்யம் படத்திலும் வேங்கை, சாமி 2 போன்ற படத்திலும் நடித்துள்ள சுதா, நாகினி, கலசம், அரசி, தென்றல், தெய்வம் தந்த வீடு, லக்ஷ்மி ஸ்டோர்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

குழந்தைகள் இல்லை
1994ல் உதவி இயக்குநர் ரவி என்பவரை காதலித்த சுதா, குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். 30 வருட திருமண வாழ்க்கையில் குழந்தை வேண்டாம் என்று தம்பதியினர் முடிவெடுத்ததால் தற்போது வரை சுதா - ரவி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.