ரூ. 22 லட்சம் கடன்!! தயாரிப்பாளரிடம் காசு கேட்டு அழுத அஜித் குமார்..
அஜித் குமார்
நடிகர் அஜித் தற்போது கார் ரேஸிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். விரைவில் அவரின் அடுத்த பட ஷூட்டிங் துவங்கவுள்ள நிலையில், அஜித் பற்றிய பல சுவாரஷ்யமான தகவல்களை பலர் நேர்காணல்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்தவகையில், பிரபல தயாரிப்பாளர் காஜா மொய்தீன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில், ஆனந்த பூங்காற்றே படத்திற்கு அஜித்திடம் கால்ஷீட் கேட்க போனேன்.
அங்கு தெலுங்கு பிரொடியூசர் ஒருவர் அவரை செமயாக திட்டிக்கிட்டு இருந்தார். அஜித் சார் அழுதுட்டு இருந்தார்.
22 லட்சம் ரூபாய்
அவர் போனதுக்குப்பின் கண்ணெல்லாம் தொடச்சிட்டு, எனக்கு கொஞ்சம் கடன் இருக்கு, எனக்கு 22 லட்சம் ரூபாய் கிடைக்குமான்னு கேட்டார்.
அடுத்த நாளே அவருக்கு சிங்கிள் பேமெண்டா கொடுத்தோம். அந்த சமயத்தில் அவருக்கு முதுகுல ஆப்ரேஷன் பண்ண போயிட்டார். அதனால் பிரசாந்த் கமிட் பண்ணோம்.

அஜித்த பாக்க ஹாஸ்பிடல் போனா பிரசாந்த் நடிக்கிறார்னு அந்த விளம்பரத்தை பேப்பர்ல காமிச்சு, என் கைய புடிச்சு அழுது கொண்டே, நான் திரும்ப வரமாட்டேன்னு நினைச்சீங்களா? இந்த படத்தை நான் தான் பண்ணனும்னு அழுதார்.
அதுக்கப்புறம் அவருக்காக காத்திருந்து அந்த படத்தை எடுத்ததாக தயாரிப்பாளர் காஜா மொய்தீன் தெரிவித்துள்ளார்.